Sunday, March 13, 2011

India vs South Africa - Paper Tiger stands exposed

இப்பகலிரவு ஆட்டத்தில், இந்தியா டாஸில் வென்றதே பாதி வெற்றிக்கு இணையானது என்று கூறலாம். முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. சேவாக் அபாயகரமாக வாழ்ந்தாலும், அவர் ஆட்டத்தின் இயல்பே அத்தகையது என்பதால், குறை கூற எதுவுமில்லை! சச்சின் சச்சின் போல விளையாடினார் :) ரன்கள் குவிந்தன! ஸ்டெயின், மார்கலின் பந்து வீச்சும் பரிமளிக்காததால், இருவரும் பந்து வீச்சை அடித்துத் துவைத்து காயப் போட்டனர்.

எப்போதும் போல, ஒரு மோசமான பந்துக்கு சேவாக் விக்கெட்டிழந்தார்! ஸ்கோர் 142/1, 17.4 ஓவர்களில், ரன்ரேட் 8.04. அடுத்து வந்த கம்பீர் முதலில் நிதானமாக ஆடினாலும், போகப் போக பிக்-அப் பண்ணிக் கொண்டு சச்சின் மேல் அனாவசிய அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். Sachin was playing in a league of his own that brooks no opposition!!

30 ஓவர்களில் ஸ்கோர் 197/1 (RR: 6.56). சச்சின் 83 (73 பந்துகள்). இதில் 3 சிக்ஸர்கள். சின்ன வயது சச்சின் போல மீண்டும் சிக்ஸர்கள் அடிக்க ஆரம்பித்துள்ளார் :) ஸ்டெயினின் பந்தை ஹூக் செய்து அடித்த சிக்ஸர் கண்ணிலேயே நிற்கிறது! பேட்டிங் பவர் பிளே எடுக்கப்படாத நிலையில், இத்தகைய பலமான அடித்தளம் அமைக்கப்பட்ட சூழலில், இந்த ஸ்கோர் இரு மடங்காகும் என்ற எதிர்பார்ப்பு இயல்பானது! இது சற்று அதிகம் என்று கொண்டாலும் கூட, மீதமுள்ள 20 ஓவர்களில் பிரதி ஓவருக்கு 7 ரன்கள் என்ற கணக்கில், 140 ரன்கள் எடுப்பதில் எந்த சிரமமும் இருந்திருக்க முடியாது! ஆக 340 ரன்கள் என்ற இலக்கை bare minimum என்று கூற வேண்டும்!!!

36வது ஓவரில் சச்சினின் மற்றொரு சதம் (99th International Ton). 38வது ஓவர் முடிவில் ஸ்கோர் 253/1. 39-ல் பவர்பிளே தேர்ந்தெடுத்தது சரியானது என்றாலும், 40வது ஓவரில் சச்சின் அவுட்டானதும், பதானை களமிறக்கியது தவறு, பதான் ஆட்டத்துக்கு பவர்பிளே தேவையில்லை என்பது என் எண்ணம்! அடுத்த ஓவரில் கம்பீரும் விக்கெட்டிழந்தார். இப்போதாவது கோலியை அனுப்பியிருக்க வேண்டும். 2வது அல்லது 3வது டவுனில் கோலி ஆடுவதே பயனளிக்கக் கூடியது. அதே ஓவரில் பதானும் அவுட்!

இப்போதும் கோலியை அனுப்பாமல், தோனி களமிறங்கினார். தோனியின் தற்போதைய திராபை ஃபார்முக்கு அவர் 5-down வருவதே சாலச் சிறந்தது! கடைசி 4-5 ஓவர்களில் "பட்டால் பாக்கியம் படாவிட்டால் லேகியம்" என்று அதிரடியாக மட்டை சுழற்றுவதற்கு அவரது புஜபராக்கிரமம் உதவலாம்! With his pathetic form, Dhoni promoting himself either to accelerate scoring OR to steady the ship is absolutely of NO USE at all. ஹெலிகாப்டர் ஷாட்டை தோனி அற்புதமாக ஆடுவதை (விளம்பரங்களில் மட்டும்!) பார்த்திருப்பீர்கள் :-)

கம்பீர் விக்கெட்டுக்குப் பின் இந்தியர்கள் செய்தது harakiri மட்டுமல்ல, மூளையை கழட்டி வைத்து விட்டு ஆடிய middle order-ன் பேட்டிங் (அனுபவம் இல்லாத) கென்யா, கனடா பேட்டிங்குக்கு நிகராக இருந்தது! பவர் பிளே ஓவர்களில் 4 விக்கெடுகள் இழந்து 30 ரன்கள் எடுத்தது atrocious to say the least! Worse was to follow! அடுத்த 5.4 ஓவர்களில், மீதி 5 விக்கெட்டுகளும் காலி, 13 ரன்கள், மொத்தத்தில் 300 கூட தேறவில்லை! 296 ஆல் அவுட்!!!! 320 is a par score on this pitch என்று வர்ணனையில் யாரோ கூவிக் கொண்டிருந்தார்கள்!

I am pretty used to seeing the Indian middle order debacles but this one left me speechless :) Favorites என்று எல்லா தளங்களிலும் சதாசர்வகாலமும் அறிவிக்கப்படும் நம்பர் 1 அணி இது போல மகா கேவலமாக, பிசாசு உலவாத ஆடுகளத்தில் மண்ணைக் கவ்வியதை என்னவென்று சொல்ல! It was really unpardonable to have wasted such a dream start provided by the top 3 batsmen. இந்த எழவுக்குத் தான் சச்சின் இறுதி வரை ஆட வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்! அவர் சென்ற பின்னர், கம்பீராவது ஒரு பக்கம் நின்று ஆட முயற்சித்திருக்க வேண்டும்.

அதே சமயம், இறுதி 10 ஓவர்களில் (முதல் 40 ஓவர்களில் அடிபட்டு சுருண்டிருந்த) தென்னாப்பிரிக்க ஹயீனா, சச்சின், கம்பீர் விக்கெட்டுகளுக்கு பின் லேசான ரத்த வாடையை முகர்ந்து விட்டது :) ஸ்டெயினின் பந்து வீச்சில் வீரியம் கூடியது. இவருக்கு 5 விக்கெட்டுகள்! This showed the exemplary character of the great fast bowler who was taken to task in his earlier spells. His last 4 overs read 4-0-9-5.

தென்னாபிரிக்கா ஆடியபோது, ஆடுகளம் பேட்டிங்குக்கு அத்தனை சாதகமாக இல்லை. சாகீர் சிறப்பாக பந்து வீசினார். 5-0-13-1. This time around, SA played sensibly and bided its time. அம்லா, காலிஸ், டிவிலியர்ஸ் அரைச் சதங்கள் எடுத்தனர். காலிஸின் ஸ்வீப், டிவிலியர்ஸின் inside-out விளாசல்களும் அருமை. தோனியின் பந்து வீச்சு மாற்றங்கள் சரியாக அமைந்ததாலும், ஹர்பஜன் அருமையாக பந்து வீசி முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தியதாலும், ஆட்டம் இறுதி ஓவர் வரை சென்றது என்று கூறலாம். 45 ஓவர்கள் முடிவில், தெ.ஆ 251/6 (46 runs required from 30 balls, RR: 5.57, RRR: 9.20). ரென்ஷன் :)

3 ஓவர்கள், 31 ரன்கள். முனாஃப் ஓவரில் 14 ரன்கள்! 2 ஓவர்கள், 17 ரன்கள். மேலும், ரென்ஷன்! சாகீரை கடைசி ஓவருக்கு வைத்திருக்கலாம், முனாஃப் 14 ரன்கள் வாரி வழங்காமல் இருந்திருந்தால்! (49வது) சாகீரின் ஓவரில் 4 ரன்கள் மட்டுமே! Outstanding bowling with the old ball !! 1 ஓவர், 13 ரன்கள் தேவை. மேலும் மேலும் ரென்ஷன் :)

இந்த ஓவரை வீச நெஹ்ராவை தோனி அழைத்தது தவறு என்று டிவிட்டரில் பல எதிர்ப்புக் குரல்கள் :) With Harbajan bowling well with a good rythm, he should have been the automatic choice. நெஹ்ராவின் முதல் 2 பந்துகளில், பீட்டர்சன் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என்று விளாசினார்! Match was effectively lost for India! நெஹ்ரா அல்லது முனாஃபுக்கு பதிலாக அஷ்வின் ஆடியிருந்தால், இந்த ஆடுகளத்தில் தெ.ஆ 297 என்ற இலக்கை கனவில் கூட எட்டியிருக்காது என்று உறுதியாகக் கூறுவேன்! பிரவீன் இல்லாததும் ஒரு பெரிய குறை, சாகீருக்கு நல்லதொரு பார்ட்னராக இருந்திருப்பார்.

Choking என்பதை ஒரு கலை வடிவமாக மாற்றிய பெருமை கொண்ட தென்னாபிரிக்காவை, 13 ரன்கள் தேவை, 7 விக்கெட்டுகள் இழப்பு என்ற நிலையில், பீட்டர்சன் என்ற திராபை இறுதி ஓவரை எதிர்கொண்ட சூழலில், இந்தியா எளிதில் வீழ்த்தியிருக்க வேண்டும்! அதை தவறவிட்டது தான், என்னளவில், மற்ற எல்லாவற்றையும் விட மிகப்பெரிய கேவலம்! As of now, India's world cup dream looks like "Nightmare on Elm street" :-)

என்றென்றும் அன்புடன்
பாலா

6 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான கிரிக்கெட் கவர் ஸ்டோரி சார். மேட்ச் பார்க்கும் போது நான் ஃபீல் பண்ணியதை 100% அப்படியே சூப்பரான எழுத்து நடையில் கொண்டு வந்துட்டீங்க சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஜாகீரை கடைசி ஓவருக்கு வைத்திருக்கலாம்,அதே போல் 49-வது ஓவர் ஹர்பஜனுக்கு கொடுத்திருந்திருக்கலாம்! இமாலயத்தவறு! ஏன் சார் இங்கிலாந்து-இந்தியா மேட்ச் பத்தி நீங்க எழுதலை..? டைம் இருந்தா எழுதுங்க சார்!

A Simple Man said...

//பதான் ஆட்டத்துக்கு பவர்பிளே தேவையில்லை/// I second this..
//13 ரன்கள் தேவை, 7 விக்கெட்டுகள் இழப்பு என்ற நிலையில், பீட்டர்சன் என்ற திராபை இறுதி ஓவரை எதிர்கொண்ட சூழலில், இந்தியா எளிதில் வீழ்த்தியிருக்க வேண்டும்! அதை தவறவிட்டது தான், என்னளவில், மற்ற எல்லாவற்றையும் விட மிகப்பெரிய கேவலம்! ///
Dhoni is yet to learn a few things.

-ASM

enRenRum-anbudan.BALA said...

ராமசாமி,
கருத்துக்கு நன்றி. இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் குறித்து இட்லிவடை வலைப்பதிவில் எழுதியிருக்கிறேன். மேலும், சில முக்கிய ஆட்டங்கள் பற்றியும் எழுதியிருக்கிறேன். வாசித்து விட்டு தங்கள் எண்ணங்களைக் கூறலாம்.

http://idlyvadai.blogspot.com/search/label/%E0%AE%8E.%E0%AE%85.%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE

enRenRum-anbudan.BALA said...

A Simple man,
Dhoni is a over rated captain who does not have much 'cricket" intelligence. But he is a good leader of men. He must know that instincts wont work all the time !!!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails